பாவூர்சத்திரத்தில் காய்கறி விற்பனை அமோகம்


பாவூர்சத்திரத்தில் காய்கறி விற்பனை அமோகம்
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் காய்கறி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கேரளாவில், வரும் வியாழக்கிழமை ஓணம் பண்டிகை நடைபெற உள்ளதை தொடர்ந்து பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இங்கு கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஓணம் பண்டிகையை தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்ந்தது.

நேற்று சாம்பார் உள்ளி கிலோ ரூ.50, வெண்டைக்காய் ரூ.65, தக்காளி ரூ.25 புடலை ரூ.30, சீனி அவரை ரூ.30, சாம்பார் வெள்ளரி ரூ.20, சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனையானது. மேலும் பல காய்கறிகளும் விலை உயர்ந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏல முறையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.


Next Story