தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்


தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்
x

அருப்புக்கோட்ைடயில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சற்று இளைப்பாற பொதுமக்கள் நிழல் தேடியும், தாகம் தணிக்க குளிர்பான கடைகளை தேடி செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்து குவித்து வைக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்காக இந்த பழங்கன் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் நெருங்க, நெருங்க விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.



Next Story