வீரபாண்டி அருகே தெப்பக்குளமாக மாறிய பள்ளி வளாகம் மாணவர்கள் அவதி


வீரபாண்டி அருகே  தெப்பக்குளமாக மாறிய பள்ளி வளாகம்  மாணவர்கள் அவதி
x

வீரபாண்டி அருகே தெப்பக்குளமாக மாறிய பள்ளி வளாகத்தால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி,

வீரபாண்டி ஒன்றியம் ராஜாபாளையம் ஊராட்சியில் கரிகட்டாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பரவலாக பெய்த கனமழையால் இந்த பள்ளியை தண்ணீர் சூழ்ந்தது.

இதையடுத்து பள்ளி வகுப்பறையில் தேங்கிய நீர் மின்சார மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. ஆனால் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பள்ளி முன்பு தெப்பக்குளம் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளி வகுப்பறை இயங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பள்ளி அருகே உள்ள கோவில் வீட்டில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பள்ளியை நாள்தோறும் பார்வையிட்டு சென்றபோதிலும் பள்ளி முன்பு தேங்கியுள்ள நீரை அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து உடனடியாக பள்ளி குழந்தைகள் மன அழுத்தம் இன்றி கல்வி பயில மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story