பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பரமேஸ்வரன் வரவேற்றார். பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சுனில் குமார், சங்கர், சலீம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.


Next Story