பள்ளி வேன் பள்ளத்தில் இறங்கியது; மாணவர்கள் உயிர் தப்பினர்


பள்ளி வேன் பள்ளத்தில் இறங்கியது; மாணவர்கள் உயிர் தப்பினர்
x

பள்ளி வேன் பள்ளத்தில் இறங்கியது; மாணவர்கள் உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வேன் கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியில் இருந்து இன்று காலை 20 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஒடுகம்பட்டி சாலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதையடுத்து டிரைவர் வேனை விட்டு இறங்கி ஓட முயன்ற போது அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடித்தனர். பின்னர் வேனுக்குள் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வேன் டயர்கள் மிகவும் தேய்மானமாக இருந்ததால், பிரேக் பிடிக்கவில்லை என டிரைவர் கூறியதாக தெரியவந்தது. மேலும் பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திலும் முறையிட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story