விதைகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை தெரிவிக்க வேண்டும்
பரிசோதனை நிலையங்களில் விதைகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என விதைச்சான்று இயக்குனர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
பரிசோதனை நிலையங்களில் விதைகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என விதைச்சான்று இயக்குனர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
நாகையில், விதைச் சான்று, அங்ககச் சான்று, விதை ஆய்வு, விதை பரிசோதனை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியாரிடம் இருப்பில் உள்ள உளுந்து, பயறு விதைகளை சுத்தம் செய்து, சான்று அட்டை பொருத்தி, நெல் தரிசில் உளுந்து மற்றும் பயறு சாகுபடிக்கு வினியோகம் செய்யும்படி இம்மாத இறுதிக்குள் விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரி எடுத்து, விதையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தரமற்ற விதைகள் விற்பனை செய்து கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை பரிசோதனை நிலையங்களில் பெறப்படும் விதைகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும்.
இதில் நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் சுதா மற்றும் விதை பரிசோதனை அலுவலர்கள், விதைச் சான்று, அங்ககச் சான்று அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.