பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அலட்சியம்


பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்  அலட்சியம்
x

பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அலட்சியம்

திருப்பூர்

தளி, m

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பல்வேறு தேவைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உடுமலைக்கு வருகை தருகின்றனர்.இதனால் பஸ் நிலையத்தின் அருகே உள்ள உடுமலை- பொள்ளாச்சி பிரதான சாலை எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்த நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏதுவாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அது இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.இது குறித்து சமூக அலுவலர்கள், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல ஆயிரங்கள் மதிப்பீட்டில் உடுமலை- பொள்ளாச்சி பிரதான சாலையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகள் கடந்தும் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் அதில் அமைக்கப்பட்ட லிப்ட் மற்றும் மேம்பாலம் சேதமடைந்து வருகிறது. ஒரு நிமிடத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய திட்டத்தை ஓராயிரம் நாட்கள் கடந்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காதது வேதனை அளிக்கிறது. இதனால் மேம்பாலம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் மற்றும் வரிப்பணம் யாருக்கும் உபயோகம் இல்லாமல் வீணாகி வருகிறது.அந்த நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தி இருந்தால் கூட பொதுமக்கள் பயன் அடைந்து இருப்பார்கள்.திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் அதனை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் தரப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பொதுமக்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் சமீப காலமாக சாலையின் மையப் பகுதியில் டிவைடர்கள் அதிகமாக வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உடுமலை பொள்ளாச்சி சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

------------


Next Story