கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் ரூ.1¾ கோடியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நகர்மன்ற தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது இதில் 6.800 குடியிருப்புகள். 1.400 நிறுவனங்கள் உள்ளன. நகராட்சிக்கு 5 சமுதாய கழிவறை, 5 பொது கழிவறைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டி நிரம்பியதும், சுத்தம் செய்யப்பட்டு கழிவுநீர் திறந்த வெளியில் கொட்டப்படும்.இதற்கு மாறாக நகராட்சியால் 6-வது வார்டில் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதன் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஆணையர்(பொறுப்பு) பிரதான் பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இந்த சுத்திரிகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தனர்.


Next Story