கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்


கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்
x

பந்தலூர் அருகே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து அட்டி சேலக்குன்னுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் ரேஷன் கடை, பள்ளிகள், பால் கொள்முதல் நிலையம், கடைகள் உள்ளன. இதனால் தினமும் பலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையே கடைகளில் சேகரமாகும் குப்பைகள் கழிவுநீர் கால்வாயில் வீசப்படுகிறது.

இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கழிவுநீர் கால்வாயில் மேல்மூடி இல்லாததால், கடைகளுக்கு செல்லும் போது தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் பாதுகாப்பாக சென்று வர மேல்மூடி அமைக்க வேண்டும். மேலும் குப்பை தொட்டி வைப்பதோடு, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றனர்.


Next Story