சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்


சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்
x

சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், திண்டுக்கல் தொழிலாளர்நலத் துறை இணை ஆணையர் கோவிந்தன் முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்கள் பிரச்சினை சம்பந்தமாக தொழிலாளர்நலத் துறை துணை ஆணையர் முன்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக எந்த தொழிலாளர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொள்ளக்கூடாது என்று இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளிருப்பு ேபாராட்டம் வாபஸ்பெறப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை ஆலை மெயின் கேட் முன்பு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


Next Story