நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் துரோகத்தின் தோல் உரித்து காட்டப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்


நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் துரோகத்தின் தோல் உரித்து காட்டப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
x

நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் துரோகத்தின் தோல் உரித்து காட்டப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் துரோகத்தின் தோல் உரித்து காட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது. இதெல்லாம் அறிந்தும் அறியாமலும் இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக என்ற இயக்கத்தை வழி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமிக்கு தீர்ப்பு மூலம் ஆதரவு அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story