வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
குன்னூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
நீலகிரி
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. தற்போது பாம்புகளும் வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குன்னூர் அருகே மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசிப்பவர் சந்துரு. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து உள்ளது. இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து ஓட்டம் பிடித்து வெளியே வந்தனர். பின்னர் இதுகுறித்து குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை தேடினர். அப்போது பாம்பு பீரோவுக்கு அடியில் பதுங்கி இருந்தது. தொடர்ந்து பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது மோதிர வளையன் பாம்பு என தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story