பைக்கில் புகுந்து அட்டகாசம் செய்த பாம்பு - வாகன ஓட்டிகளே உஷார்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி அடுத்து உள்ள மும்முனி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது உணவகத்தின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது நல்லபாம்பு ஒன்று சீனிவாசனின் வாகனத்திற்குள் புகுந்துள்ளது.
இதையடுத்து இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பைக்கின் முன்பகுதியில் உட்புகுந்திருந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பை காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.
Related Tags :
Next Story