மொபட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது


மொபட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மொபட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சுபாநகரில் உள்ள துரை என்பவர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மந்தித்தோப்பைச் சேர்ந்த பாலு என்பவர் மகள் தங்கம் (வயது 21). என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் பணிக்கு வந்த இவர் மொபட்டை அலுவலகம் அருகில் நிறுத்தியிருந்தார். பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்ப மொபட்டை எடுக்க சென்றுள்ளார். அப்போது மொபட்டில் நல்லபாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி மொபட்டிற்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த குருமலை காப்பு காட்டில் விடப்பட்டது.


Next Story