நாய் கடித்து புள்ளிமான் செத்தது


நாய் கடித்து புள்ளிமான் செத்தது
x

நாய் கடித்து புள்ளிமான் செத்தது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே மேலூரில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வெளியேறிய புள்ளிமானை நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறியது. இதில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் பீட்டர், இறந்த புள்ளிமானை நார்த்தாமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் கால்நடை மருத்துவர் பிரியா, மானை உடற்கூறு பரிசோதனை செய்து பின்னர் வனக்காட்டில் புதைத்தனர். இப்பகுதியில் அடர்ந்த காடுகள், மலைகள் இருப்பதால் மான்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் மான்களை நாய்கள் விரட்டி கடிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் மான்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story