செஞ்சி அருகேதீக்காயமடைந்த மாணவி சாவு
செஞ்சி அருகே தீக்காயமடைந்த மாணவி உயிரிழந்தாா்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று மாணவி வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றினாள்.அப்போது எதிர்பாராதவிதமாக மாணவியின் பாவாடையில் தீப்பற்றி மளமளவென எரிந்தது.
இதில் தீக்காயமடைந்து வலியால் அலறித்துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாதனா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.