டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி


டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி
x

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி

திருவாரூர்

வடுவூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பலியானான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மாணவன்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள கீழநெம்மேலி கீழத்தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் சுவேதன்(வயது 14). இவன், திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை இவன் கீழநெம்மேலி வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(50) என்பவர், டிராக்டரில் நெல் ஏற்றிக்கொண்டு காய வைப்பதற்காக வந்தார். டிராக்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு டிராக்டரில் இருந்து கீழே இறங்கி சென்றார்.

டிராக்டரில் சிக்கி பலி

அப்போது டிராக்டர் திடீரென நகர்ந்து சென்றது. இதனை கண்ட மாணவன் சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக டிராக்டர் மீது ஏறி பிரேக்கை அழுத்த முயன்றான். அப்போது நிலைதடுமாறி சுவேதன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான். அவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நேரத்தில் டிராக்டர் நகர்ந்தது. இதில் டிராக்டர் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவேதன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சோகம்

இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் மாணவனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுவேதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிராக்டரில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story