பணிக்கு வரக்கூடாது என மிரட்டிய 3 பேர் குறித்து புகார் அளித்த என் மனைவியை சப்-இன்ஸ்பெக்டர் திட்டி அனுப்பிவிட்டார் -5 பெண் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் தொழிலாளி புகார்


பணிக்கு வரக்கூடாது என மிரட்டிய 3 பேர் குறித்து  புகார் அளித்த என் மனைவியை  சப்-இன்ஸ்பெக்டர் திட்டி அனுப்பிவிட்டார் -5 பெண் குழந்தைகளுடன் வந்து  கலெக்டரிடம் தொழிலாளி புகார்
x

பணிக்கு வரக்கூடாது என மிரட்டிய 3 பேர் குறித்து புகார் அளித்த என் மனைவியை சப்-இன்ஸ்பெக்டர் திட்டி அனுப்பிவிட்டார். 5 பெண் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் தொழிலாளி புகார் அளித்தார்

மதுரை


தற்கொலை செய்துகொண்ட நாகலட்சுமியின் கணவர் கணேசன், 5 பெண் குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அனிஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பஞ்சு மில்லில் கூலி தொழிலாளியாக இருக்கிறேன். எனக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி நாகலட்சுமி கள்ளிக்குடி மையிட்டான்பட்டியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி பொறுப்பாளராக இருந்து வந்தார். எனது மனைவியை அந்த வேலைக்கு தகுதி இல்லை என கூறி பஞ்சாயத்து துணை தலைவரின் கணவர் பாலமுருகன், கிளார்க் முத்து, வார்டு உறுப்பினர் வீரக்குமார் ஆகியோர் மரியாதை குறைவாக நடத்தினர். மேலும் எனது மனைவி நாகலட்சுமியை, அந்த வேலையில் இருந்து விரட்டி விட வேண்டும் என்பதற்காக மிகவும் தரக்குறைவாக பேசினர். எனவே எனது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் எனது மனைவியை திட்டி அனுப்பி விட்டார். எனது மனைவியை பணி செய்ய விடாமாலும், போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததாலும் எனது மனைவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எனது மனைவி, தனது கைப்பட தனது சாவிற்கு காரணம் பாலமுருகன், முத்து, வீரக்குமார் ஆகியோர்தான் காரணம் என கூறியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 5 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் எனக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி குழந்தைகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story