சப்- இன்ஸ்பெக்டர் முகத்தில் மிளகுப்பொடி தூவி வழிப்பறிசெய்ய முயற்சி


சப்- இன்ஸ்பெக்டர் முகத்தில் மிளகுப்பொடி தூவி வழிப்பறிசெய்ய முயற்சி
x

விஷாரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் மிளகுப்பொடியை தூவி வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

விஷாரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் மிளகுப்பொடியை தூவி வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மிளகுப்பொடி தூவினர்

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பழனிவேல் (வயது 46) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தனது மனைவியை அழைத்துக்கொண்டு குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். விஷாரத்தை அடுத்த நந்தியாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பழனிவேல் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். இந்த நேரத்தில் அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென சப்- இன்ஸ்பெக்டர் பழனிவேல் முகத்தில் மிளகுத்தூளை அடித்துள்ளனர்.

2 பேருக்கு வலைவீச்சு

பின்னர் இரண்டு பேரும் ஆயுதங்களுடன் தாக்க வந்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட பழனிவேல் தனது மோட்டார்சைக்கிளில் இருந்த சைரனை ஒலிக்க செய்துள்ளார். இதனை எதிர்பார்க்காத அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் மிளகுப்பொடியை தூவியதில் கண் எரிச்சலால் அவதிப்பட்ட பழனிவேல் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story