மிஸ் கூவாகம் நடைபெற உள்ள மண்டபத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
உளுந்தூர்பேட்டையில் மிஸ் கூவாகம் நடைபெற உள்ள மண்டபத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் போட்டி நாளை(திங்கட்கிழமை) காலை உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முதல் சுற்றும், விழுப்புரத்தில் மதியம் இறுதிச்சுற்றும் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மிஸ் கூவாகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி நடைபெற உள்ள மண்டபத்தையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story