சாதாரண உடையில் ேபாலீஸ் நிலையத்துக்கு சென்ற விருதுநகர் சூப்பிரண்டு


சாதாரண உடையில் ேபாலீஸ் நிலையத்துக்கு சென்ற விருதுநகர் சூப்பிரண்டு
x

சைக்கிளில் சாதாரண உடையில் ேபாலீஸ் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு ெசன்றிருக்கிறார். அவரை அங்கிருந்த போலீஸ்காரர் நீங்கள் யார்? என்று கேட்ட ருசிகரம் நடந்துள்ளது.

விருதுநகர்


சைக்கிளில் சாதாரண உடையில் ேபாலீஸ் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு ெசன்றிருக்கிறார். அவரை அங்கிருந்த போலீஸ்காரர் நீங்கள் யார்? என்று கேட்ட ருசிகரம் நடந்துள்ளது.

சைக்கிளில் சென்று ஆய்வு

விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் சைக்கிளில் சென்றார். சாதாரண உடையில் இருந்தார்.

அங்கு இருந்த போலீஸ்காரரிடம், தான் ஒரு புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே அந்த போலீஸ்காரர், அதிகாரிகள் ரோந்து சென்று இருக்கிறார்கள். ஓரமாக உட்காருங்கள். அவர்கள் வந்ததும் கூப்பிடுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

உடனே அந்த நபர், அங்கிருந்து செல்லாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தார்.

பின்னர், அந்த நபர் நேராக போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறைக்கு சென்று, அவரது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். பணியில் இருந்த போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுந்திருக்கும்படி கூறினார்.

நீங்கள் யார்?

அந்த நபரோ, நான் யார் தெரியுமா? எனக்கேட்க, போலீஸ்காரர் குழப்பத்தில் தவித்து நீங்கள் யார்? என பதிலுக்கு கேட்டுள்ளார்.

பின்னர், நான்தான் விருதுநகர் எஸ்.பி. சீனிவாச பெருமாள் என்று சொன்னதும், அவருக்கு தூக்கிவாரிப் போட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யார் என தெரியாமல் இருக்கிறாரே? எப்படியும் தனக்்கு திட்டுதான் கிடைக்கும்? என போலீஸ்காரர் நினைத்தார். ஆனால், போலீஸ் சூப்பிரண்டு அவரை ஏதும் சொல்லாமல், நான் ஆய்வுக்கு வந்திருக்கிறேன். அதிகாரிகளை வரச்சொல்லுங்கள் என கூற, உடனே தகவல் பறக்க சற்று நேரத்தில் வெளியில் சென்று இருந்த போலீசாரும், அதிகாரிகளும் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர்.

பின்னர் நள்ளிரவு நேரத்திலும் ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு, அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சைக்கிளிலேயே தனது அலுவலகத்துக்கு திரும்பினார்.

30 கி.மீ. சைக்கிள் பயணம்

இன்னும் விசாரித்த போதுதான் வேெறாரு தகவலும் கிடைத்தது. விருதுநகரில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் ஆமத்தூர் உள்ளது. அங்கு இரவில் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திவிட்டு, பின்னர் சைக்கிளிலேயே மேற்கு போலீஸ் நிலையத்துக்கு சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வந்துள்ளார். பின்னர் அங்கும் ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில், இந்த ஆய்வுக்காக தன்னந்தனியாக அவர் கிட்டத்தட்ட இரவில் 30 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டிச்சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டுவின் இந்த திடீர் ஆய்வை விருதுநகர் போலீசார் வரவேற்று உள்ளனர். மக்களும் வரவேற்கிறார்கள். இதுபோன்று மற்ற அதிகாரிகளும் ஆய்வு செய்தால், குற்றங்கள் குறையும் என்றும், போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகள்-போலீசார் தவறு செய்வது தடுக்கப்படும் எனவும் பலர் தெரிவித்தனர்.


Next Story