உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x

திருச்சுழியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 8 லட்சம் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் பள்ளி மாணவர்கள், பன்னிரு திருமுறை மன்றம், சிவபக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் குகன் செய்திருந்தார்.


Next Story