சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வருகின்ற ஜூன் மாதம் 1-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சுகன்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கண்காணிப்பாளர் தன்னாயிரம், கணக்கர் கலைச்செல்வன், பேஸ்கர் கரிகாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். காணிக்கையாக ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 330 ரொக்கமும் 29 கிராம் தங்கமும் 48 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றன.


Next Story