வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி
x

கடையநல்லூரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்திலோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் 83 வாக்குச்சாவடி மையங்களில் 25 பள்ளிக்கூடங்களில் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான அமைவிடங்களை கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் அமைத்து அதற்கான அலுவலர்களை நியமித்து உள்ளார். அதன்படி 25 பள்ளிக்கூடங்களில் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story