வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி
செங்கோட்டையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்தது.
செங்கோட்டை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், நகராட்சி பகுதி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 3, 4, 5-வது வார்டு பகுதி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணிகள் செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து நடந்தது.
கவுன்சிலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுடர்ஒளிராமதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியா் சேவியா் அலெக்சாண்டிரியா வரவேற்று பேசினார். மேலும் அமைச்சாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணைந்தால் கிடைக்க கூடிய பலன்கள் குறித்து மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத்தலைவா் பேச்சிமுத்து விளக்கவுரையாற்றினார். தொடர்ந்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.