தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்


தர்மபுரி மாவட்டத்தில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி  முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
x

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தர்மபுரி:

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது.

முதல் கட்டமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தெரேசாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Next Story