டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்


டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்
x

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் குலோத்துங்கன் வரவேற்று பேசினார். இதில் பா.ஜ.க. புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட அலுவலக செயலாளர் சோபன்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் திருச்சி- புதுக்கோட்டை சாலையோரம் மாத்தூரில் செயல்படும் அதிகப்படியான மீன் கடை, இறைச்சி கடைகளை அப்புறப்படுத்தி ஊராட்சியின் சார்பில் அதற்கான ஒதுக்கி கொடுத்துள்ள இடத்தில் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்குடியில் 10 வருடத்திற்கு மேலாக மூடப்பட்டிருக்கும் ஊராட்சி நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரமங்கலம், வடுகபட்டி, புதூர், தேவளி ஆகிய கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நீர்பழனி, நரியப்பட்டி ஆகிய ஊர்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story