வரி பாக்கியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்


வரி பாக்கியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்
x

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு வரி பாக்கியை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் கோ. பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவையாக உள்ளது. வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் நிலுவைதாரர்கள் வரி இனங்களை சிரமமின்றி செலுத்துவதற்கு ஏதுவாக மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை நகராட்சியில் கணினி வசூல் மையம் செயல்படும். மேலும் நிலுவைதாரர்கள் h://turbarepay.g என்ற இணையதளம் மூலமாகவும் ஜோலார்பேட்டை நகராட்சியை தேர்வு செய்து வரி மற்றும் வரியில்லாத இளங்களின் தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே வரி நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் வரி பாக்கியை நிலுவையின்றி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறும், நகராட்சியின் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


Next Story