மாநகராட்சிக்கு வரி செலுத்த கணினி வரிவசூல் மையங்கள் 31-ந்தேதி வரை இயங்கும்
மாநகராட்சிக்கு வரி செலுத்த கணினி வரிவசூல் மையங்கள் 31-ந்தேதி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் வருகிற 31-ந்தேதி வரை கணினி வரிவசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். எனவே 2022- 2023-ம் ஆண்டுக்கான மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம், தொழில்வரி, கடை வாடகை மற்றும் நீண்ட காலமாக சொத்து வரி பாக்கி வைத்திருக்கும் வணிக வளாக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உடனடியாக வரிஇனங்களை செலுத்தி சீல் வைப்பு போன்ற நடவடிக்கையினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவல் நெல்லை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story