டீ மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை


டீ மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை
x

டீ மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

துவரங்குறிச்சி அருகே உள்ள தேனூர் கிழக்கு களத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). டீ மாஸ்டர். இவருக்கு வயிற்று வலி பிரச்சினை இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணம்ஆகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து ஒரு மரத்தின் அடியில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story