விஷம் குடித்து டீக்கடைக்காரர் தற்கொலை
மதுக்குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து டீக்கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
மதுக்குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து டீக்கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
டீக்கடைக்காரர்
மயிலாடுதுறை அருகே உள்ள அருண்மொழிதேவன் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 65). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என்று சுப்பிரமணியனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டீக்கடைக்கு தேவையான சாமான்களை வாங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு சுப்ரமணியன் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
மயிலாடுதுறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த சுப்ரமணியன் தனது வீட்டின் அருகே வந்து தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.