குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள அய்யனார்காலனியை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி (வயது 38). இவருக்கும் ராஜலட்சுமி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சத்தியமூர்த்தி சிவகாசி விளாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் தூக்குபோட்டு சத்தியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.