மண்டபத்தில் புகுந்து போராட்டம் நடத்தி காதலனின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை


மண்டபத்தில் புகுந்து போராட்டம் நடத்தி காதலனின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை
x

திருமங்கலத்தில் திருமண மண்டபத்துக்குள் புகுந்து காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலத்தில் திருமண மண்டபத்துக்குள் புகுந்து காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது.

நிறைமாத கர்ப்பிணி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகள் நாகபிரியா (வயது 30). தனியார் பள்ளி ஆசிரிைய. இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்தார்.

இந்த நிலையில் நாகபிரியா தனது உறவினரான, மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னச்சாமியை (32) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சின்னச்சாமி சிவில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

திருமண ஆசைவார்த்தை கூறி சின்னச்சாமி, நாகபிரியாவிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இதனால் தற்போது நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருமண ஏற்பாடு

இந்த நிலையில் நேற்று காதலன் சின்னச்சாமிக்கும் விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நாகபிரியாவுக்கு இதுகுறித்து தெரியவர, அவர் தனது பெற்றோரையும், காவல் உதவி எண் 100-க்கு தொடர்பு கொண்டு போலீசாரையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்திற்கு சென்றார். மணமகன் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இரவு நேரம் என்பதால் போலீசார் காலையில் பேசிக்கொள்ளலாம் என அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை சின்னச்சாமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருமண மண்டபத்திற்கு தனது பெற்றோருடன் வந்த நாகப்பிரியா மண்டபத்திற்குள் சென்று போராட்டத்தி்ல ஈடுபட்டார். அப்போது, மணமகன் வீட்டாருக்கும் நாகபிரியா குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமணத்தை நிறுத்தினர்

நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இருதரப்பினரையும் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், சின்னச்சாமி, நாகபிரியாவை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். அதோடு அவரை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த நாகபிரியாவும், காதலன் சின்னச்சாமியும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

திருமண நேரத்தில் மண்டபத்தில் புகுந்து காதலனனின் திருமணத்தை நிறைமாத கர்ப்பிணி, தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story