ஆசிரியையின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சினையால் ஆசிரியையின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் நாகராஜ்(வயது 40). தையல் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பகண்டைகூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story