தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பொட்டல் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி முருகேஸ்வரி. இவர்களது மகன் நவீன் (வயது 22). இவர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கும் படி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்ட போது அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story