வாகனம் மோதி வாலிபர் சாவு


வாகனம் மோதி வாலிபர் சாவு
x

சூளகிரியில் வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

விழுப்புரம் மாவட்டம் முனிவாலி கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது25). சம்பவத்தன்று இவர், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அலகுபாவி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தீபக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story