வாலிபர் கைது
விநாயகர் சிலை உடைப்பு:வாலிபர் கைது
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையத்தில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குறிச்சி ஆண்டவர் இரண்டாவது தெருவை சேர்ந்த முத்துராஜ் (வயது 30) என்பவரை போலீசார் பிடித்தனர். கோவில் நிர்வாகிக்கும், முத்துராஜ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி முத்துராஜ், விநாயகர் சிலையை உடைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முத்துராஜை மேலப்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். (முன்வந்த செய்தி 11-ம் பக்கம்).
Related Tags :
Next Story