தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது


தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
x

சுத்தமல்லியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பத்மநாதன் (வயது 33). இவர் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று கொண்டாநகரம் பஸ் நிறுத்தம் அருகே வேலைக்காக சென்று கொண்டிருந்த இவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ஆனைக்குட்டி மகன் மகேஷ் (30) என்பவர் பத்மநாதனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை பறித்துள்ளார். தடுக்க முயன்ற பத்மநாதனை அவதூறாக பேசியதுடன், அரிவாளால் வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பத்மநாதன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தார்.


Next Story