வாலிபர் கைது


வாலிபர் கைது
x

நெல்லையில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவர் தன்னுடைய தந்தையுடன் டவுன் பாட்டப்பத்து ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ரோட்டில் மரக்கட்டைகளை இடையூறாக வைத்தது தொடர்பாக பாட்டப்பத்துவை சேர்ந்த மாரியப்பன் என்ற விக்னேஷ் (19) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், மாரியப்பன் மற்றும் அவருடைய தந்தையை தாக்கி, மிரட்டினார். இதுகுறித்து டவுன் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தார்.


Next Story