வாலிபர் பலி


வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது ஆம்னிபஸ் மோதல்: வாலிபர் பலி; டிரைவர் கைது

திருவாரூர்


திருவாரூர் அருகே குளிக்கரை புலியூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் காமராஜ் (வயது 34). இவரது மனைவி இறந்துவிட்டார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த காமராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருவாரூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு திருவாரூரில் உள்ள ஸ்டூடியோவிற்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாகை- தஞ்சை சாலையில் வன்மீகபுரம் அருகே வந்த போது எதிரே வந்த ஆம்னி பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் ஜெயசீலன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story