வாலிபர் தீ வைத்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி சாவு


வாலிபர் தீ வைத்ததில் படுகாயமடைந்து   சிகிச்சை பெற்று வந்த சிறுமி சாவு
x

சின்னமனூர் பகுதியில் வாலிபர் தீ வைத்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்

தேனி

சின்னமனூர் பகுதியில் 7 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந்தேதி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு விஜயகுமார் (வயது 19) என்பவர் வந்தார். பின்னர் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தம் போட்டதால் சிறுமியின் ஆடையில் தீ வைத்து எரித்து விஜயகுமார் கொல்ல முயன்றார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றியதால் சிறுமி வலியால் அலறினார். இதையடுத்து படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு்ள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.


Next Story