தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து


தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சகோதரி பற்றி அவதூறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கன்னியாகுமரி

குழித்துறை:

சகோதரி பற்றி அவதூறாக பேசியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மார்த்தாண்டம் அருகே மாலன்விளை பகுதியை சேர்ந்தவர் சுஜின் (வயது 25). இவருடைய சகோதரியை பற்றி கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்த தொழிலாளியான சஜூ (35) என்பவர் அவதூறாக பேசியுள்ளார்.

இதனை கேள்விபட்ட சுஜின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சஜூவிடம் தட்டிக் கேட்டுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது மோட்டார் சைக்கிளை மாலன்விளை பகுதியில் உள்ள வாகைகுளம் அருகில் நிறுத்தி விட்டு வீடு நோக்கி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் சஜூ நின்றிருந்தார். இதனை பார்த்த சுஜின் மீண்டும் அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சஜூ தன்னிடம் இருந்த கத்தியால் திடீரென சுஜினின் தலையில் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜூவை தேடிவருகின்றனர்.


Next Story