ஆட்டோவில் மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ விபத்தில் சிக்கியது


ஆட்டோவில் மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ விபத்தில் சிக்கியது
x

ஆட்டோவில் மோதி விட்டு நிற்காமல் சென்ற டெம்போ விபத்தில் சிக்கியது

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு பெண் ஒருவர் ஆட்டோவில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமவர்மன் புதுத்தெரு பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டெம்போ ஒன்று ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றது. அப்பேது, டெம்போ ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் மீனவ பெண் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அங்கு நின்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டெம்போ ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அபாயகரமான வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற சிமெண்டு கலவை எந்திரத்தின் மீது மோதி கழிவுநீர் ஓடையில் சிக்கி நின்றது. இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த டெம்போவை மீட்டனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய டெம்போ டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் என்பதும், வள்ளவிளை கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் ராட்டினம் அமைத்து உள்ளதாகவும், அதற்காக அங்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story