அரசின் இலவச வேட்டிக்கான டெண்டர் தேதி மீண்டும் தள்ளி வைப்புவருகிற 31-ந் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு
அரசின் இலவச வேட்டிக்கான டெண்டர் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இலவச வேட்டிக்கான டெண்டர் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-டெண்டர்
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்திக்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசின் இலவச வேட்டி உற்பத்திக்கு, 40-ம் எண் ரக காட்டன் நூல் இ-டெண்டர் மூலம் 1,000 டன் கொள்முதல் செய்ய அறிவிப்பை கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். அப்போது டெண்டர் நடத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இ-டெண்டர் தள்ளி வைத்து மறுடெண்டர் வருகிற 31-ந்தேதி நடத்த அறிவித்துள்ளனர். அதற்கேற்ப அனைத்து உற்பத்தியாளர்களும் பங்கு பெறும் வகையில் டெண்டர் கொள்கையில் மறுசீரமைப்பு செய்து வெளியிட்டுள்ளனர்.
500 டன் நூல்
தற்போதைய சூழலில் தமிழக அரசின், 6 கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்தும் குறைந்த அளவு நூல்களே உற்பத்தியாவதால் இதுவரை 10 சதவீத வேட்டி உற்பத்தியை கூட, விசைத்தறியாளர்கள் தொடங்கவில்லை. இந்த நிலையில் அடுத்தடுத்து நூல் வராவிட்டால், உற்பத்தியை தொடர முடியாது. வருகிற 31-ந்தேதி டெண்டர் பெற்று, இறுதி செய்து நூல் உற்பத்தியாகி, விசைத்தறியாளர்களுக்கு கிடைக்க பல நாட்கள் ஆகும். எனவே அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேட்டி உற்பத்திக்கான 40-ம் ரக காட்டன் நூல், 500 டன் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.