கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு
கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு போனது.
திருச்சி
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும், வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. நேற்றுமுன்தினம் கோவில் பூசாரி கூத்தைப்பார் சாமியார் தெருவை சேர்ந்த முருகேசன்(வயது 51), பூஜை முடிந்த பின்னர் இரவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவிலுக்குள் சென்று பார்த்தபோது மருதகாளியம்மன் கழுத்தில் கிடந்த சுமார் ஒரு பவுனுக்கும் மேல் உள்ள தாலியை மர்ம நபர்கள் வெட்டி திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story