வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை திருட்டு
வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை திருட்டு போனது.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே பெருமநாடு புதுகிளாப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி அழகம்மாள். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நகைகளை அணிந்து சென்று விட்டு, பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் கழற்றி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிலுக்கு அணிந்து செல்வதற்காக நகைகளை பீரோவில் பார்த்த போது, அதில் இருந்த 11 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. ஆனால் பீரோ, கதவு எதுவும் உடைக்கப்படவில்லை எனவும், சாவி வைத்த இடத்திலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியசாமி அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story