வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு


வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
x

தஞ்சையில் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்


தஞ்சையில் வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வியாபாரி வீட்டில் நகை திருட்டு

தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 38) வியாபாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இந்த 12 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

போலீசில் புகார்

இது குறித்து லட்சுமிகாந்தன் தஞ்சை நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story