அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 35). ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வரும் இவர், நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு அருகே உள்ள தனது அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வாஞ்சிநாதன் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது நேற்று அதிகாலை 3.25 மணிக்கு ஊதா நிற சட்டை, கைலி அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து கொள்ளிடம் போலீசில் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.