தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
திண்டுக்கல் அருகே தொழிலாளி வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 65). அவருடைய மனைவி நாகலட்சுமி (44). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் காலையில் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். அதன் பிறகு மதியம் நாகராஜ் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் நாகராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story