தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 25 Feb 2023 3:54 AM IST (Updated: 25 Feb 2023 1:31 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

சேலம்

தேவூர்:

தேவூர் அருகே கத்தேரி சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42). தொழிலாளி. இவர் கடந்த 22-ந் தேதி குடும்பத்துடன் சேலம் பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சசிகுமார் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து சசிகுமார் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்து அவர் தேவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.


Next Story